ப்ளூ சட்டைக்கு முன்பாகவே தன் படத்திற்கு அவரை போலவே மிமிக்ரி செய்து விமர்சனம் செய்த Sk – வைரலாகும் வீடியோ.

0
604
Sk
- Advertisement -

ப்ளூ சட்டை மாறனை போல மிமிக்ரி செய்து தன் படத்திற்கு விமர்சனம் தானே விமர்சனம் கொடுத்துள்ள சிவகார்த்திகேயனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
don

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தில் சமுத்திரக்கனிக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

- Advertisement -

குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள் :

கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? தன் தந்தையின் எண்ணத்தை முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. பெரும் எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படத்தின் முதல் நாளில் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனத்தை தான் கொடுத்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை குரலில் பேசிய Sk :

சிவகார்த்திகேயன் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பது பலரும் அறிந்த ஒன்று. சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் தனது பயணத்தை ஒரு மிமிக்கிரி கலைஞராக தான் ஆரம்பித்தார். இப்படி ஒரு நிலையில் டான் படம் வெளியாவதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் நடிகர்களை போல மிமிக்ரி செய்தார். அப்போது ப்ளூ சட்டை தன் படத்திற்கு விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும் என்று மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டையும் உருவக்கேளிகளும் :

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

கண்டித்த பிரபலங்கள் :

அதிலும் இவர் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது. அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல் அஜித்தை தொடர்ந்து உருவக் கேலி செய்து வந்தார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அஜித் மற்றும் வலிமை படத்தை கேலி செய்தே வந்தார். இவரின் இந்த கேலிக்கு ஒரு சில விஜய் ரசிகர்கள் கூட ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement