அனல் பறக்கும் ஜி ஸ்கொயர் ரெய்டு, சிக்கலில் மாட்டிய sk – என்ன காரணம் தெரியுமா ?

0
703
Sk
- Advertisement -

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு மீண்டும் எழுந்திருக்கும் புது சிக்கல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:

மேலும், டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த பிரின்ஸ் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது.

மாவீரன் படம்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் தான் அறிவித்திருக்கிறது.

-விளம்பரம்-

படத்திற்கு வந்த சிக்கல்:

இந்த நிலையில் மாவீரன் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இந்த மாவீரன் திரைப்படத்தை அருண் விஷ்வா என்பவர் தான் தயாரிக்கிறார். இவர் ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்து பண உதவி பெற்று தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால், தற்போது ஜீ ஸ்கொயர் நிறுவனத்தை வருமான வரி சோதனை செய்து இருக்கிறது. ஆகையால், வருமான வரி சோதனை மாவீரன் படத்தின் பக்கம் திரும்ப வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாவீரன் படத்திற்கு சிக்கல் வந்துவிடுமோ! என்ற அச்சத்தில் படக்குழுவினர் இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

அயலான் என்ற படத்தில் சிவா நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவி தான் அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட்டை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

Advertisement