என் உழைப்பை வைத்து பணத்தை மென்கிறார்கள். சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன.

0
1758
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேறி உள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் இதுவரை சினிமாவில் பெரிதாக சர்ச்சைகளில் சிக்கவில்லை. ஆனால் இடையில் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மனக்கசப்பை அனைவரும் அறிவார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் என்னம்மா இப்படி பண்றிங்களேமா என்ற பாடல் வெளியானபோது லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயன் மீது கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதனை லட்சுமி ராமகிருஷ்ணனே கூட கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகளில் கொடுக்கும் ரியாக்ஷன் தான் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி ஒப்புக்கொண்டதற்கு நன்றி. ஆனால், ஒரு சில திரைப்படங்களில் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை கேலி செய்து காட்சிகளாகவும் , பாடல்களாகவும் வெளியிட்டு, அதன் மூலம் பணத்தை சம்பாதித்து பெயரையும் புகழையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதனை மறந்து விடுகிறார்கள். என்னுடைய உழைப்பெல்லாம் அவர்கள் கேலி செய்து இருக்கிறார்கள். என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுவது சிவகார்த்திகேயனை தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். எனவே, சிவகார்த்திகேயன் அறிமுகமானது 3 படத்தில் தான் என்றும் சிலர் கூறுவதும் உண்டு. அட அவ்வளவு எங்க நம்ம தல நடித்த ஏகன் படத்தில் கூட சிவகார்த்திகேயன் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். ஆனால், ஹீரோவாக அறிமுகமாகி இருக்க வேண்டியது என்னவோ குறள் 786 என்ற பதில் மூலம் தான் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது. இந்த படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement