தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர். அதற்குப் பின்னர் தான் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். சிவகார்த்திகேயன் அவர்கள் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்து உள்ளார். இவர் நடிப்பை தாண்டி படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த முதல் படம் ‘கனா’. இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த இணையதள ஊடகத்தின் விருது விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் சிவகார்த்திகேயனுக்கு விருது வழங்கி அவரைக் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் பேசினார்.

Advertisement

அவர் கூறியது, எம்ஜிஆர் முதல் பாலச்சந்தர் வரை பலரும் தயாரிப்பாளராகி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய கனவை நனவாக்குவதற்கு தான். ஆனால், தன் நண்பனின் கனவை நனவாக்க தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனை இந்த தருணத்தில் நான் பாராட்டுகிறேன். உண்மையை சொல்லப்போனால் இளைய தளபதி விஜய்க்கு பின்னர் அதிக ரசிகர்களை கொண்ட குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக சிவகார்த்திகேயன் தான் இருக்கிறார். இதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியது, என்னவென்றே தெரியாத துறை தான் சினிமா. வெற்றியும், தோல்வியும் நம்மிடம் கிடையாது.

நிறைய பேர் சேர்ந்து பார்வையாளர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் கிடைப்பது தான் வெற்றி. சினிமா என்பது சவாலான விஷயம். அதில் பயமும் இருக்கும், தைரியமும் இருக்கும். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அதிகம். தோல்வி அடைந்தால் அது வெற்றிக்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து என்ன என்ற கேள்வியை உருவாக்குவது தான் தோல்வி. உண்மையிலேயே நான் அதிக மகிழ்ச்சி அடைந்தது கனா திரைப்படம் வெற்றி அடைந்த பிறகு தான். நான் மிகப்பெரிய நன்றி சொல்லவேண்டும் என்றால் அது செல்வராகவனுக்கு தான். ஏனென்றால் எதிர்நீச்சல் படத்தை பார்த்து செல்வராகவன் நீ நல்ல டேலண்ட் என்று என்னை பாராட்டினார். அதை தனுஷ் என்னிடம் சொன்னார்.

Advertisement

இவர்கள் இருவரும் சொல்லும் போதே நான் பெரிய விருதுகளை வாங்கின மாதிரி சந்தோஷப்பட்டேன். கனா படத்தை தயாரித்தது அருண்ராஜா மேல வைத்த நம்பிக்கையில் தான். என்னுடைய இந்த எட்டு வருட சினிமா பயணத்தின் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறது. கனா படத்துக்கு கிடைத்த விருது எனக்கானது இல்லை. என் நண்பன் அருண் ராஜா காமராஜாவுக்கு கிடைத்தது. அவர் அடுத்த படத்தை மிகப் பெரிய நடிகரை வைத்து இயக்க போகிறார். இந்த மேடையில் நான் கூற முடியாது. கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

Advertisement
Advertisement