சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கும் நடிகை – அதுவும் யார் பாருங்க.

0
553
sivakarthikeyan
- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கு நடிகை ஒருவர் ஆங்கிலம் கற்றுக் கொடுத்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு, இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயனின் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். டான் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், அயலான் படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார் தான் சிவகார்த்திகேயன் வைத்து அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அயலான் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படம்:

அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படம் சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் கற்றுத்தர காரணம்:

இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக சென்னை, புதுவை, லண்டன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை மரியா என்பவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மரியா ஆங்கில டீச்சர் வேடத்தில் நடிக்கிறார். அவர் சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது போன்ற காட்சிகள் இந்தப்படத்தில் இருக்கிறது. இதை தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். மேலும், இந்த படத்தின் டைட்டில் குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

Advertisement