பல கோடி போட்டு எடுக்கும் படத்தில் இப்படியொரு தவறா ? Sk படத்தை கேலி செய்யும் நெட்டிசன்கள்.

0
334
prince
- Advertisement -

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் இருக்கும் மிஸ்டேக்கை ரசிகர்கள் வெளுத்து வாங்கி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

அயலான் படம்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரின்ஸ் படம்:

அதற்கான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருக்கிறது. தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உக்கரை நாட்டை சேர்ந்த மாடல் அழகி Maria Ryaboshapka கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜும் நடித்திருக்கிறார். தற்போது இந்த திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது.

கிண்டல் செய்யும் ரசிகர்கள்:

மேலும், இந்த படத்தின் முதல் பாடல் பிம்பிளிக்கி பிளாப்பி என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த பாடலில் இருந்த மிஸ்ட்டேகை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது, இந்த பாடல் வீடியோவில் Sivakarthikeyan பெயரை Sivakathikeyan என்று போட்டிருக்கிறார்கள். R என்ற எழுத்தை மறந்து இருக்கிறார்கள். இந்த தவறை பார்த்த ரசிகர்கள் பலரும் இதைக் கூட கவனிக்க மாட்டீர்களா என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement