விஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..!சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..!

0
1217
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய்-அஜித் என்ற கம்போவை போன்று விஜய்சேதுபதி என்றால் அவருக்கு போட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தான். சிவகார்திகேயன் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். அந்த வகையில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற விஜய் டிவி சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளது.

-விளம்பரம்-

Sivakarthikeyanandvijaysethupathi

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தற்போது சூப்பர் டீலக்ஸ்’, சீதக்காதி’, பேட்ட’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்து வருகிறார். இதில், சீதக்காதி படம் விஜய் சேதிபதிக்கு 25 வது படம். குறுகிய காலத்தில் 25 படங்களில் அவர் நடித்துவிட்டார். படத்துக்குப் படம் வித்யாசம் காட்டும் விஜய் சேதுபதி, தனது 25 வது படத்தில் மூத்த நாடகக் கலைஞராக நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில், ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக ’மக்கள் செல்வன் 25’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக ஒரு செக்மெண்டில் மட்டும் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருவது விஜய் சேதுபதிக்கே தெரியாதாம். 25 படங்கள் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு வாழ்த்துச் சொல்ல சிவகார்த்தியேகன் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் அவர்கள் இருவரும் எடுக்கொண்ட செல்ஃபி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement