நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காட்டுத் தீயை விட வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்களும், அரசாங்கமும் கவலையில் உள்ளார்கள். கொரோனா பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். தமிழ் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க இன்னும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 11,000த்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சென்னையில் மட்டும் இதுவரை 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் தான் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவானது. இதற்காக நடிகர் கார்த்தி அவர்கள் ஈரோடு மாவட்டத்தை பாராட்டி இருந்தார்.

Advertisement

அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்டமும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சமூகவலைதளத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து பதவு ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, இது தொடரட்டும் கலெக்டர் சார். இதற்காக அயராது உழைக்கும் ஒவ்வொருவரும் நமது மரியாதைக்கு தகுதியானவர்கள் என்று வாழ்த்தியுள்ளார்.

தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. சாதாரண மேடை கலைஞனராக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் தொகுப்பாளராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.

Advertisement
Advertisement