மாநாடு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த டீவீட்டில் பிரேம்ஜி பெயரை விட்ட Sk - ஏன் என்று கேட்ட பிரேம்ஜிக்கு அவர் கொடுத்த செம பதில்.

By Ajju · 25/11/2021

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வரும் சிம்பு சமீப காலமாகவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக இவரது படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இறுதியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆகவே ரொம்ப நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்திற்க்கான முன் பதிவுகளுக்கான டிக்கெட்டுகள் கூட மலமலவென விற்றுத்தள்ளியது.

இதையும் பாருங்க : நள்ளிரவு வரை போன ‛மாநாடு' பஞ்சாயத்து, சரியான நேரத்தில் ராஜ தந்திரயாக செயல்பட்டுள்ள உதயநிதி.

மாநாடு படம் பல தடைகள் கடந்து நாளை வெளியாக இருப்பதை எண்ணி கொண்டாட்டத்தில் இருந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்று மாநாடு படம் வெளியாவது என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துஇருந்தார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், மீண்டும் கொஞ்ச நேரத்தில் 'மாநாடு' படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். ஆனால், அந்த டீவீட்டில் பிரேம்ஜியை டேக் செய்ய மறந்துவிட்டார். இதனால் நடிகர் பிரேம்ஜி '' என்று பதிவிட அதற்கு சிவகார்த்திகேயன் 'சார்,நீங்களும் வெங்கட் பிரபு சாரும் ஒன்னு தான்னு நெனச்சி உங்க பெற சேக்கல சார். வாழ்த்துக்கள் சார் தொடர்ந்து கலக்குங்க' என்று பதில் அளித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full