நள்ளிரவு வரை போன ‛மாநாடு’ பஞ்சாயத்து, சரியான நேரத்தில் ராஜ தந்திரயாக செயல்பட்டுள்ள உதயநிதி.

0
610
maanadu
- Advertisement -

சிம்புவின் மாநாடு படம் ரிலீசாவதற்கு பல தயாரிப்பாளர்கள் உதவி செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளை கடந்து தான் திரையரங்குக்கு வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நாளை ரிலீஸ் ஆகாது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதையொட்டி மாநாடு குறித்து திரைத்துறையினரும், ரசிகர்கள் மத்தியிலும் கேள்வி எழும்பியது.

-விளம்பரம்-
மாநாடு

மேலும், படம் வெளியாவதில் என்ன பிரச்சனை? என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று திரைத்துறையினர் பேட்டி ஒன்று அளித்திருந்தார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, சிலம்பரசன் நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்த படம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்தது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனால் சிம்புவுக்கும், மைக்கேல் ராயப்பனுக்கும் இடையே பல பிரச்சனைகள் போனது.

- Advertisement -

ஆகவே மைக்கேல் ராயப்பன் தரப்பின் மூலம் தான் சிம்புவின் பட ரிலீசுக்கு சிக்கல் வருமென அனைவரும் எதிர் பார்த்தார்கள். ஆனால், மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மாநாடு படத்தயாரிப்பு முன்கூட்டியே சரி செய்து விட்டது. மேலும், மாநாடு படத்தின் தயாரிப்புக்கு பைனான்ஸ் செய்தவர்களில் முதன்மையானவர் உத்தம் சந்த். படத்தின் தயாரிப்புச் செலவுக்காக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரிடம் பணம் வாங்கி இருந்தார். அதை பட ரிலீசுக்கு முன்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் நினைத்தபடி பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

எனவே தான் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. பின் கடைசி நேரத்தில் வேறு வழியின்றி படம் வெளியாக தாமதமாகும் என தயாரிப்பாளர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதனால் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மேலும், குறித்த தேதியில் படம் ரிலீசாக விட்டால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்பட்டு திரைத்துறையினரும், சிம்பு தரப்பினரும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இதற்கு முன்னதாகவே சோனி நிறுவனம் 10.5 கோடி ரூபாய் மாநாடு படத்தின் டிஜிட்டல் உரிமை வாங்குவதாக கூறியதன் பேரில் மதுரை அன்பு செழியன் 10 கோடி ரூபாய் பணத்தை கடன் கொடுத்து உதவியிருக்கிறார்.

-விளம்பரம்-

பின் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு படத்தின் ஒளிபரப்பு உரிமை என்று கலைஞர் டிவிக்கு வாங்கி அதன் மூலம் 6 கோடி ரூபாய் பணத்தை கொடுக்க வைத்திருக்கிறார். சிம்பு படம் பிரச்சனை இல்லாமல் ரிலீசாக வேண்டும் என்பதற்காக வெந்து தனிந்தது காடு படத்தின் தயாரிப்பளார் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்து என் மகன் படம் ரிலீசாவது கௌரவப் பிரச்சினை என்று சொல்லி இருக்கிறார். இன்னும் மூன்று கோடி ரூபாய் பணத்தை சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தந்து இருக்கிறார். பின் கடன்களையெல்லாம் அடைக்கப்பட்டு திட்டமிட்டபடியே படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது என்று கூறினார்கள்.

Advertisement