அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட Sk – விமர்சனத்திற்கு உள்ளான Ak. ஏன் தெரியுமா?

0
456
ak
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக என்றென்றும் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

பல ஆண்டுகளுக்கு முன் கலைஞரின் பாராட்டு விழாவில் அஜித் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது பலர் அறிந்த உண்மை.அந்த விழாவிற்கு பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகொள்வது இல்லை. அஜித் தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கலந்துகொள்ளாததால் அடிக்கடி விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அதே போல அஜித்தின் புகைப்படங்கள் கூட வெளியவாது அரிதான ஒரு விஷயம் தான்.

- Advertisement -

தொடர்ந்து வெளியாகும் புகைப்படங்கள் :

ஆனால், கடந்த சில மாதங்களாகவே அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு பைக்கிலேயே பல இடங்களுக்கு சென்று வருகிறார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அடிக்கடி வெளியாகி கொண்டு இருந்தது.

தன் PRகளை வைத்து அஜித் செய்யும் வேலையா :

அதிலும் குறிப்பாக விஜய்யின் பிறந்தநாள் நெருங்கும் போது தான் அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வைரலானது. அதே போல விஜய்யின் பிறந்தநாளில் கூட அஜித் குறித்த ஹேஷ் டெக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. அதனால் விஜய்க்கு போட்டியாக அஜித்தே தனது Pr களை வைத்து இப்படி புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் கூட பதிவு ஒன்றை ஷேர் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் :

அதில் ‘ தன் படத்தை விளம்பரப்படுத்த மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால், வருஷத்துக்கு 365 நாளும் அவருடைய போட்டோவை மட்டும் நாம் பார்க்க முடியும். ஏனென்றால் அஜித்திற்கு விளம்பரம் புடிக்காது. அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்து போட்ருறாங்க நம்புங்கண்ணே, நம்புங்க’ என்று பதிவிட்டு இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டையை திட்டி தீர்த்தாலும், அவரின் பதிவிற்கு ஆதரகவாக பல விஜய் ரசிகர்கள் கமன்ட் செய்தனர்.

அஜித்தை சந்தித்துள்ள Sk :

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் “நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடைய பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், இந்த புகைப்படம் கடந்த மாதேமே எடுத்த புகைப்படம் என்றும் அஜித் தன்னை விளம்பரம்படுத்திகொள்ளவே இப்படி பிரபலங்களை விளம்பரம் செய்துகொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

விளம்பரம் தேடுகிறாரா அஜித் :

சமீபத்தில் கூட அஜித் ‘நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை ‘ என்று கூறியதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா பாடிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க அஜித்துடன் ஒரு மாதத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தற்போது பதிவிட்டது ஏன் என்றும் அஜித் தன் படத்திற்கு விளம்பரம் செய்யவே இப்படி செய்கிறாரா என்றும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement