பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏ ஆர் முருகதாஸ் படம் குறித்து சிவகார்த்திகேயன் போட்ட பதிவு தற்போது வைரல்.

0
3287
- Advertisement -

சிவகார்த்திகேயன்- ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களின் ஏ ஆர் முருகதாசும் ஒருவர். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், தர்பார் போன்ற பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் படங்களை இயக்குவது மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். மேலும், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது இன்று ஏ ஆர் முருகதாஸின் 49 வது பிறந்தநாள். இந்த நிலையில் இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய 23வது படத்தில் உங்களுடன் இணைவதில் சந்தோஷம் அடைகிறேன். உங்கள் கதையை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

- Advertisement -

சிவகார்த்திகேயன்- ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி:

இந்த படம் எனக்கு எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்குவதற்காக காத்திருக்கிறேன் என்று கூறி ஏ ஆர் முருகதாஸ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்வது உறுதியாகி இருக்கும் தகவலை அறிந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை ஸ்பைடர் பட தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

-விளம்பரம்-

மாவீரன் படம்:

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருந்தார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

Advertisement