‘பெண்களை இழிவு படுத்துவதா’ – டாக்டர் படத்தின் காட்சியால் பெண்கள் அமைப்பு கண்டனம். ரசிகர்களின் ரியாக்ஷனை பாருங்க.

0
2011
Doctor
- Advertisement -

டாக்டர் படத்தில் பெண்களை இழிவுப்படுத்தி காட்சிகள் வைத்துள்ளதாக கூறிய பெண்கள் சார்ந்த அமைப்புகளுக்கு தற்போது நெட்டிசன்கள் தாறுமாறாக பதிலடி கொடுத்து உள்ளனர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகிபாபு, வினய் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Image

இந்த படத்தின் செல்லம்மா செல்லம்மா, so baby, நெஞ்சமே என்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. மேலும், இந்த படம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் படத்தில் விளையாட்டில் தோல்வி அடைந்த அணிக்கு நைட்டி போட்டு விட்டு, தலையில் பூ வைத்து பெண் போல சித்தரித்து இனி உன் பெயர் கோமதி என்று கேலி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த காட்சியை குறித்து மகளிர் அமைப்புகள் பெண்கள் என்றால் இழிவா? என்று டாக்டர் படம் மீது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இதை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் எல்லோரும் பெண்கள் அமைப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் போட்டு வருகின்றனர். அதில் அவர்கள் கூறி இருப்பது, சமூகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்றது. அப்போதெல்லாம் இந்த பெண் அமைப்புகள் குரல் எழுப்பவில்லை.

பொதுவாகவே இந்த மாதிரி மகளிர் அமைப்புகள் எவன் சினிமாவில் பெண்களை தப்பாக பேசுறான், எவன் பெண்களை தப்பாக பேசி பாடல்களை போடுறான், யூடியூபில் எவன் பெண்களை பற்றி வீடியோ போடுகிறோன் என்பதை பார்த்துக் கொண்டிருப்பதை முழு நேர வேலையாக வைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது.

-விளம்பரம்-

உண்மையாகவே பெண்களுக்கு நடக்கிற ஒரு அநியாயத்தையாவது இந்த மகளிர் அமைப்பு கேட்டு பொங்கி இருக்கிறார்களா? 2 சுவாதி கொலைகள், நிர்பயா உட்பட பல சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நாட்டில் நடந்துள்ளது. இது குறித்து எந்த பெண்கள் அமைப்பும் முன்னாடி நின்று போராடியது கிடையாது.

இரண்டு வாரத்திற்கு முன்பு கூட தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்து இந்த அமைப்பில் இருந்து ஒருத்தர் கூட வந்து பேசவில்லை. ஆனால், டாக்டர் படத்தில் நைட்டி போட்டாங்க, பொட்டு வைத்தாங்கனு வரிந்து கட்டி கொண்டு வராங்க என்று சோசியல் மீடியாவில் பல்வேறு விதமாக கருத்து தெரிவிக்கிறார்கள்.

Advertisement