கைதட்டிய ரஜினி ரசிகர்கள்.! கோமாளிகளா என்று ரஜினி முன்பே திட்டிய சிவக்குமார்.!

0
8872
siva-kumar
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகர் சிவகுமார், தன்னிடம் செல்பி எடுக்க வந்த நபரின் செல் போனை தட்டி விட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனால் சிவ குமார் மீது பல்வேறு விமர்சனங்களை எழுந்தது. 

-விளம்பரம்-

இந்த விவகாரத்தை அடுத்து நடிகர் சூர்யாவும் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் செல் போனை இழந்த அந்த இளைஞருக்கு சிவகுமார் சார்பில் புதிய போன் ஒன்றும் கொடுக்க பட்டது. இருப்பினும் அடுத்து ஒரு வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலானது.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல தமிழ் சினிமா கதாசிரியரான கலைஞானம் அவர்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் கதாசிரியர் பணிபுரிந்து வருவதை பாராட்டும் விதமாக அவருக்கு பாராட்டு விழா ஒன்றை இயக்குனர் பாரதி ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பாகியாராஜ், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினி மற்றும் கலைஞானம் பற்றி தேவர் பிலிம்ஸ் தேவர் கூறியதை பற்றி மேடையில் பேசிக்கொண்டு இருந்தார் சிவகுமார்.

-விளம்பரம்-

அப்போது ரஜினி குறித்து பெருமையாக பேசும் போதெல்லாம் ரஜினி ரசிகர்கள் கைதட்டி கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் அதனை இடையூறாக கருதிய சிவகுமார், ரசிகர்களை பார்த்து, கேளுங்கபா மொதல்ல கதையை கேட்டிட்டு அப்புறம் கைய தட்டுங்க, கோமாளிங்களா என்று சற்று கோபத்துடன் கூறினார் சிவகுமார். இதனால் ரசிங்கர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement