5 நிமிடம் வேலைக்காரனால் அவமானப்பட்ட நடிகை சினேகா !

0
6351
- Advertisement -

கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தமிழ் படங்களில் நடித்து வருபவர் சினேகா. அடுத்த பல வருடங்கள் தமிழில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த நடிகை விருது இரண்டு முறையும், பிலிம்பேர் விருதுகள் பலவும் வாங்கியிருக்கிறார் சிநேகா. கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
snehaஅவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சென்ற வாரம் மோகன் ராஜா இயக்கத்தில் சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் படத்தில் ஒரு நல்ல அழுத்தமான ரோலில் நடிர்த்திருந்தார் சினேகா.

-விளம்பரம்-

ஆனால், தற்போது அந்த கதபாத்திரத்தில் ஏன் நடித்தோம் என கவலையில் உள்ளாராம். இந்த கேரக்டருக்காக கிட்டத்தட்ட 7 கிலோ எடை குறைத்து நடித்தார் சினேகா. மேலும், 18 நாள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆனால் படத்தில் பிட்டு பிட்டாக மொத்தம் 5 நிமிடன் மட்டுமே சினேகாவின் கேரக்டர் வந்துள்ளதால் தற்போது வேதனையில் உள்ளாராம்.

- Advertisement -

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பது மிக கடினம். ஆனாலும் இந்த படத்திற்காக குறைத்து நடித்தேன். நான் உடல் எடை குறைத்துள்ளது கூட தெரியாத அளவிற்கு என் காட்சிகளை வைத்துள்ளார்கள். இத்தனை வருட படங்களில் வேலைக்காரன் படத்தை போல எந்த ஒரு படத்திலும் நான் இவ்வளவு அவமானப்பட்டதில்லை என கடுப்பில் உள்ளாராம் சினேகா.

Advertisement