உடல் எடையை குறைச்சுட்டேன் – படு மாடர்ன் உடையில் லட்சுமி ராமகிருஷ்னன் வெளியிட்ட புகைப்படம்.

0
1475
lakshmi
- Advertisement -

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். மேலும், இவர் திரைப்பட நடிகையாகவும் , இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார். இதுவரை 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை ஓமன் நாட்டில் இருந்து பின்னர் 2005ல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார் லட்சுமி.

- Advertisement -

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு முன்னாள் இந்த நிகழ்ச்சியை செய்தி வாசிப்பாளரான நிர்மலா சீதா ராமன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பின்னர் தான் இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இவர் பிரபலமானது என்னவோ இந்த நிகழ்ச்சியின் மூலம் தான்.கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல விருதுகளை பெற்றது. இப்படி ஒரு நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு, கொஞ்சம் உடல் எடையை குறைத்து உள்ளதாக கூறியுள்ளார். உண்மையில் முன்பை விட உடல் எடை குறைத்து சற்று ஸ்லிம்மாக தான் மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement