நகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..!இம்முறை Amazon பித்தலாட்டம்..!

0
258

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் நகுல் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எதாவது பரிசளிக்கலாம் என்று நினைத்துள்ளார். இதனால் பிரபல ஆன் லைன் நிறுவனமான flipkartல் 1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்தார் நகுல். அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அது போலியான ஐ போன் என்று தெரியவந்துள்ளது. இதனால் flipkart சேவை மையத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க மறுத்ததால் ட்விட்டர் பக்கத்தில் புலம்பினார் நகுல். பின்னர் எப்படியா அவருக்கு பணம் திரும்ப கிடைத்துவிட்டது. 

இந்நிலையில் சூப்பர் ஸ்டாருடன் லிங்கா படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா அமேசான் இணையதளத்தில் ரூ. 18 ஆயிரத்திற்கு ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த ஹெட்போன் டெலிவரி ஆனதும் அதை பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அவர் ஆர்டர் செய்த ஹெட்போனுக்கு பதிலாக துருபிடித்த இரும்புத் துண்டுகள் இருந்துள்ளது. இது தொடர்பாக சேவை மையத்தை தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் வரவில்லையாம்.இதனால் வெறுப்படைந்த சோனாக்ஷி யாருக்காவது ரூ.18 ஆயிரத்திற்கு பளபளக்கும் குப்பை வேண்டுமா? என்று கேட்டு ட்விட்டரில் நக்கல் செய்துள்ளார் .