உடல் எடை குறைத்து மீண்டும் இளமையான தோற்றத்திற்கு திரும்பிய சோனியா அகர்வால்.!

0
872
sonia-agarwal
- Advertisement -

2003 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் கோவில்,மதுரை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்

-விளம்பரம்-

பின்னர் 2004 ஆம் ஆண்டு மீண்டும் செல்வர்காவன் இயக்கத்தில் “7 ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார் நடிகை சோனியா அகர்வால். ஆனால், திருமணத்திற்கு பின்னர் இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்று கூறி இயக்குனர் செல்வராகவன் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். விவகாரத்தானதும் மீண்டும் படங்களில் நடிக்க தூங்கினார்.

இறுதியாக அருண் விஜய் நடித்த தடம் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் படு குண்டாக வயதான தோற்றத்தில் தோன்றிய சோனியா அகர்வால், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement