இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதிகள் , மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்,” என்று கூறினர்.

Advertisement

இப்படி கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல ஆயிரம் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த 6ஆம் தேதி ட்விட்டரில், தனது அத்தைக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாக கூறி உதவி கேட்டு பதவிட்டிருந்தார்.மேலும் அந்த ட்வீட்டில் அவர் உத்திர பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்தையும் டேக் செய்திருந்தார்.

அவருடைய இந்த ட்வீட்டைக் கண்ட சமூக ஆர்வலரும், பாலிவுட் நடிகருமான சோனு சூட், பத்து நமிடத்தில் உங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வந்து சேரும். மேலும் விவரங்களை தெரியப்படுத்துங்கள் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே ரெய்னாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டரை அந்த மாநிலத்தில் உள்ள தனது கொரானா மீட்புக் குழுவின் மூலம் வழங்கியிருக்கிறார் சோனு சூட். இதனை தொடர்ந்து அந்த ட்வீட்டில் மீண்டும் பதிவிட்ட ரெய்னா, சோனு பாய் இவ்வளவு உதவிகளை செய்த உங்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். ரெய்னாவின் இந்த ட்வீட்டானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement