தனுஷ் பட நடிகைக்கு குழந்தை பிறந்தது – குவியும் ரசிகர்களின் வாழ்த்து.

0
324
Soonam
- Advertisement -

தனுஷ் பட நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. தற்போது தனுஷ் அவர்கள் நானே நானே வருவேன், வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படம் தி கிரே மேன். அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய படம் தான் தி கிரே மேன். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி இருந்த இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

ராஞ்சனா படம்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி இருந்த இந்தி திரைப்படம் ராஞ்சனா. இந்த படத்தை தான் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள்.

சோனம் கபூர்:

இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் விளம்பரம் நடிகையும் ஆவார்.

-விளம்பரம்-

சோனம் கபூர் திருமணம்:

பிரபல ஹிந்தி நடிகரான அணில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். இவர் 2007 ஆம் ஆண்டு சவாரியா என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். பின் நடிகை சோனம் கபூர் அவர்கள் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் சோனம் கபூர் படங்களில் நடித்து கொண்டு தான் இருந்தார்.

சோனம் கபூருக்கு பிறந்து உள்ள குழந்தை:

இந்நிலையில் இவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை சோனம் கபூரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில் அவர், எங்களுக்கு ஆதரவாக இருந்த மருத்துவர்கள், நண்பர்களுக்கு நன்றி என்று குறிப்பிடுகிறார். தற்போது இவரின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து சோனம் கபூர் – ஆனந்த் அகுஜாதம்பதியினருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement