மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலமாக சினிமாவுக்கு வந்து சினிமாவில் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும் குறிப்பாக வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்தான் பரோட்டா முருகேசன். மேலும் வெண்ணிலா கபடி குழு ஆரம்ப காலத்தில் சிறிய படமாக இருந்தாலும். திரைப்படம் ரிலீஸ் ஆகி வெளிய வந்த போது பெரிய படமாக பேசப்பட்டது அந்த படத்தில் நடித்த அனைத்து முகங்களும் புது முகங்களாக இருந்த நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதற்கு காரணம் இயக்குனர் சுசீந்திரன் மட்டுமே அந்தப் படத்தின் மூலமாக தான் எனக்கும் நடிகர் சூரி அப்புகுட்டி என வெளியில் வந்தோம்.என நம்மிடம் அவர் வாழ்க்கையை பற்றி மனதிறந்து பேசும் பரோட்டா முருகேசன்.

ஆரம்பகாலத்தில் சென்னையில் பட்டாணி கடையில் பொட்டலம் போட்டு கொண்டு இருந்தேன் அப்போது குங்குமம் குமுதம் போன்ற புத்தகங்களை படிக்க ஆரம்பித்து அதில் வரும் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்து போனது. அந்தசமயத்தில் எனது தம்பி ஒருவன் நாடகத்தில் நடிப்பதாக கூறினான் அதை பார்க்க வருமாறு அழைத்தான். அங்கு சென்று நான் நாடகத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் மக்கள் அங்கும் இங்கும் நடப்பதாகவும் ஏறி இறங்குவதாகவும் இருந்தார்கள் எனக்கு அது மிகவும் தொந்தரவாக இருந்ததால். அந்த நாடகத்தின் டைரக்டரை சந்தித்து இவர்கள் இப்படி பண்ணுவது தொந்தரவாக உள்ளது என கூறும் போது.

Advertisement

இதையும் பாருங்க : CWCலேயே Controversy create பண்ண ட்ரை பன்றாங்க,இன்னும் பிக் பாஸ் போனா – CWC பிரபலம் வெளியிட்ட வீடியோ.

பரோட்டா முறுகேசனின் நாடக வாழ்க்கை :-

அவர் நீங்கள் நாடகங்களை மிகவும் ரசிக்கிறீர்கள் என்று வாங்கலாம் ஒன்றாக பயணிக்கலாம் என்று கூறி என்னையும் அவர்களுடன் இணைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் நாடகங்களுக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன் நாடகத்திலும் நீங்கள் நடியுங்கள் என்று அவர் கூறிய பொழுது சரி நடிக்கலாம் என்று முதன்முறையாக லூசு மோகன் சார் அவர்களுடன் நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது ஐ சி அம்பேத்கர் அரங்கில் நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் போது வீடு மனைவி மக்கள் படத்தின் இயக்குனர் டி பி கஜேந்திரன் அங்கு வந்தார் அவர்தான் எனது நடிப்பையும் பாராட்டி நன்றாக நடிக்கிறாய் உனக்கு எனது படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். சொன்னது மட்டும் இல்லாமல் அவர் பெண்கள் வீட்டின் கண்கள் என்ற படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார்

Advertisement

வெண்ணிலா கபடி குழு பட வாய்ப்பு :-

அதன் பின்பு போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டு சினிமா டைரக்டரை சந்தித்து வாய்ப்பு கேட்பதெல்லாம் எனக்கு தெரியாது. மறுபடியும் நாடகங்களில் எடுத்துக் கொண்டிருந்தேன் இப்பொழுது நடிகர் சங்கத்தில் அஸ்வத்தாமன் நாடகம் போட்டுக் கொண்டிருந்த பொழுது ரவி அண்ணன் நடிகர் முரளி ஆச்சி மனோரமா எல்லாம் நீ நன்றாக நடிக்கிறாய் என பாராட்டினார்கள் அப்பொழுது என்னுடன் நடித்துக் கொண்டிருந்தேன் மணிச்சந்திரன் என்பவர் சினிமாவிற்கு ஆர்டிஸ்ட் பிடித்துக் கொடுப்பார் போல அவர் என்னிடம் இந்த மாதிரியாக வெண்ணிலா கபடி குழு என்ற படத்திற்கு ஒரு கேரக்டர்க்கு ஆள் தேவைப்படுகிறது நடிக்கிறியா என்றார்.

Advertisement

முருகேசன் புரோட்டா முருகேசனாக மாறியது :-

நான் சரி நடிக்கலாம் என்று சொன்னேன் பின்பு என்னை ஒரு இடத்திற்கு வர சொன்னார் அங்கிருந்த அவர் வண்டியில் என்னை அழைத்து சென்று இயக்குனர் சுசீந்திரனின் அசிஸ்டன்ட் அங்கு ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் இதுதான் கதை இதுதான் தங்களது கதாபாத்திரம் என்று நடித்து காட்ட சொன்னபோது நான் எனது சொந்த டயலாக்களையும் போட்டு நன்றாக நடித்து பின்பு சரி நன்றாக நடிக்கிறீர்கள் என்று அந்த சீனில் என்ன நடிக்க சொன்னார்கள். அதன் பின்பு தான் பரோட்டா முருகேசன் என்ற பெயர் வந்தது அதன் பின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது சிறிய கதாபாத்திரங்கள் என்றாலும் பெயர் சொல்லும் அளவிற்கு இருந்தது.

நான் இன்று சினிமாவில் நடிகனாக இருக்கிறேன் என்றால் என் மனைவி மட்டுமே :-

தான் இந்த அளவிற்கு வளர்ந்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்றால் என்னுடைய மனைவிதான். எங்களது கிராமத்திலேயே வெளியில் சென்ற 100 ரூபாய் 90 சம்பாதித்து சம்பாதித்து வந்து வந்து கொண்டு இருந்தார்கள் நான் அன்றைய கால 90 கால காலகட்டத்திலேயே என்னுடைய சம்பளம் 20 தான் அதிலேயே என் மனைவியை குடும்பத்தை நடத்துவாள். அதற்கு காரணம் அவளுக்கு என் இடத்திலிருந்து புரிதல் மட்டுமே காரணம்.நம் கணவர் இப்போதுதான் ஒரு கலைஞனாகவும் ஒரு படைப்பாளியாகவும் உருவெடுத்துக் கொண்டிருக்கிறார் இவரை இப்படியே விட்டு விட்டால் நன்றாக வருவார் என்று என் மீது நம்பிக்கை வைத்து என் கஷ்ட காலங்களில் என்னுடன் நின்று கை கொடுத்தவள்.

புரோட்ட முருகேசனின் சோகமான மறுபக்கம் :-

என் மனைவி குழந்தையை பெற்றெடுத்தால் இறந்து விடுவோம் என்று தெரிந்தே குழந்தையை வைராக்கியமாக பெற்றெடுத்தவள். என் மனைவிக்கு கிட்னி பெயிலியர் ஆகிவிட்டது அதன்பின் என் குழந்தையை பெற்றெடுத்து அவள் காலமாகிவிட்டாள். அதன் பின்பு எனது அம்மா என் நண்பர்கள் சொந்தக்காரர்கள் சிறு குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் மற்றொரு திருமணம் செய்து கொள் என்றார்.நான் செய்யவில்லை ஏனென்றால் குழந்தையை பெற்றால் தான் இறந்து விடுவோம் என்று தெரிந்தே இந்த குழந்தையை நான் பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்றவள். எனக்காகவும் நான் கஷ்டப்பட்ட காலத்தில் என்னுடன் இருந்த மனைவிக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். இன்று சங்கடமான தருணங்களையும், சந்தோசங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

Advertisement