CWCலேயே Controversy create பண்ண ட்ரை பன்றாங்க,இன்னும் பிக் பாஸ் போனா – CWC பிரபலம் வெளியிட்ட வீடியோ.

0
354
biggboss
- Advertisement -

பிக் பாஸ் வாய்ப்பே வேண்டவே வேண்டாம் என்று வித்யூலேகா கூறியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வித்யூலேகா. இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “ என்ற படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் இவர் தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். சினிமா உலகில் நுழையும் போது நடிகை வித்யு லேகா பப்ளியாக தான் இருந்தார். பின் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமும் நடைபெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : முதல் படத்திற்க்கு பின் தன் படங்களுக்கு இசை வெளியிட்டு விழாவே வைக்காத அருள்நிதி – அதுக்கு காரணம் கலைஞர் தானாம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

திருமணத்திற்குப் பிறகு வித்யூலேகா செட்டிலான நேரத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. இதை ஏற்றுக்கொண்டு இவர் விளையாடி இருந்தார். இந்த நிகழ்ச்சி மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. புது வித்தியாசமான முறையில் இந்த சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது.

-விளம்பரம்-
Vidhyu-Raman

வைல்ட் கார்டு சுற்று:

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி பல வாரங்களை கடந்து இறுதி சுற்றுக்கு ஸ்ருதிகா, தர்சன், அம்ம அபிராமி, வித்யூலேகா சென்றிருக்கிறார்கள். கடந்த வாரம் குக் வித் கோமாளி கடந்த 3ன் வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று இருந்தது. அதில் கிரேஸ் கருணாஸ் அவர்கள் அட்வான்டேஜ் பயன்படுத்தி முத்துக்குமாரிடம் இருந்த weet potatoவை வாங்கி கொண்டார். இதனால் முத்துக்குமார் டென்ஷனாகி இருந்தார்.

முத்துக்குமார் குறித்து வித்யூலேகா சொன்னது:

இதைப்பற்றி கிரேஸ் கருணாஸ், அவர் காண்டாகி விட்டார் என்று கூறினார். உடனே வித்யூலேகா, அவர் ஆனால் ஆகட்டும் நீங்கள் போட்டியில் இருந்துஎலிமினேட் ஆகி இருக்கிறீர்கள். அவர் செமி பைனல் வரை வந்து விட்டார். நீங்கள் அதைப் புரிந்து போங்கள் என்று சொன்னார். இப்படி வித்யூலேகா கூறியதை பார்த்த ரசிகர்கள் முத்துக்குமார் மேல என்ன கோபம் என்று தெரியவில்லை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் வித்யூலேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.

பிக் பாஸ் வாய்ப்பு குறித்து வித்யூலேகா சொன்னது:

அப்போது அவரிடம் முத்துக்குமார் குறித்து கேள்வி கேட்டதற்கு வித்யூலேகா சொன்னது, அவர் மேல ஒரு சொட்டு நெகடிவ் பீலிங் கூட இல்லை. அவர் திறமையான குக். பைனலிஸ்ட் ஆக வந்திருக்க வேண்டும் என்று கூட சொன்னேன். கிரேஸ் அக்காவை ஊக்கப்படுத்த தான் நான் அப்படி பேசினேன் என்று கூறியிருந்தார். இதனையடுத்து பிக்பாஸ் வாய்ப்பு வந்தால் போவீங்களா? என்று கேட்டதற்கு ஒரு fun ஷோ குக் வித் கோமாலியிலேயே controversy create பண்ண பாக்குறாங்க. பிக் பாஸ் எல்லாம் போனால் அவ்வளவு தான். வேண்டவே வேண்டாம் நான் நல்லா இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement