அப்புறம் என்ன ம****க்கு இத்தன ஹோட்டல் கட்டி இருக்க – கோவில்கள் குறித்து சூரியின் கருத்தால் திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
118
soori
- Advertisement -

விருமன் ஆடியோ லாஞ்ச் விழாவில் சூரி பேசியிருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி அவர்கள் 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி, தம்பி என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது.

- Advertisement -

முத்தையா- கார்த்தி கூட்டணி:

தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது.

விருமன் படம்:

மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

விருமன் ஆடியோ வெளியீட்டு விழா:

மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், சூர்யா, அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி கூறி இருந்தது, அண்ணா சூர்யா பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

விழாவில் சூரி சொன்னது:

ஆயிரம் கோயில்களை கட்டுவதைவிட, ஆயிரம் சத்திரம் கட்டுவதைவிட ஒருவரை படிக்க வைப்பதே பல ஆண்டுகள் பேசும். அதை அவர் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதற்காக சூர்யா அண்ணனுக்கு நன்றி. அவர் மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பமே குழந்தைகளின் படிப்புக்காக உதவி வருகிறது. தற்போது நாடு முழுவதும் இது பேசத் தொடங்கி இருக்கிறது என்று சூரி பேசி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பலரும் சூரியின் பேச்சை கிண்டலடித்தும், விமர்சித்தும் வருகிறார்கள்.

Advertisement