சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திருக்கும் – விசாகன் என்பவருக்கும் நேற்று (பிப்ரவரி 11) சென்னையில் திருமணம் நடைபெற்றது. வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நடிகர்களும் கலந்துகொண்டனர். 

சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் சௌந்தர்யா விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க
: இவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது கணவ்ருடைய முதல் மனைவி.!

Advertisement

விசாகன்குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற மருந்து கம்பனி நிறுவனம் ஒன்றும் உள்ளது, விசாகன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், இவருக்கும் திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விசாகனுக்கும், சௌந்தர்யாவிற்கும் எவ்வளவு வயது வித்யாசம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசாகன் 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிறந்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த்வும் அதே செப்டெம்பர் மாதம் 1984 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் வெறும் ஒரு வயது மட்டுமே வித்யாசம்.

Advertisement
Advertisement