என்னது சௌந்தர்யாவின் இரண்டாவது கணவர் ஏற்கனவே விவாகரத்தானவரா.! வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!

0
1024
Vishagan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திருக்கும் – விசாகன் என்பவருக்கும் (பிப்ரவரி 11) சென்னையில் திருமணம் நடைபெற்றது. வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நடிகர்களும் கலந்துகொண்டனர்.

விசாகன் சகோதரி :

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ள விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்ற ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. 1983 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரபல தொழிலதிபரும் கோவை முன்னாள் எம் எல் ஏ பொன்முடியின் மகன் ஆவார்.

இதையும் படியுங்க : ரஜினியின் இரண்டாவது மருமகனின் தொழில்.! ஆண்டு வருமானம் இத்தனை கோடியா.! 

இவர்கள் குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற மருந்து கம்பனி நிறுவனம் ஒன்றும் உள்ளது, விசாகன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவருக்கு சுபாஷினி என்ற சகோதரியும் இருக்கிறார்.

விசாகன் முதல் மனைவி கனிகா :

விசாகன் ஏற்கனவே கனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2017 ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்துள்ளது. தற்போது விசாகனின் முதல் மனைவியின் புகைப்படம் ஒன்று தற்போது கிடைக்கபெற்றுள்ளது.