பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி உடல்நலக் குறைவால் நேற்று (செப்டம்பர் 25) காலமாய்யுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது.

அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். அதே போல பாடகர் எஸ் பி பி கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர். மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் எஸ் பி பியின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமா இருப்பதாக மருத்துவ நிர்வாகம் நேற்று அறிவித்த நிலையில் அவர் நேற்று மதியம் 1.04 மணி மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்து இருந்தது.எஸ் பி பிக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

அவரது உடலுக்கு பல்வேறு பொது மக்களும் திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டில் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement