பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வெள்ளிக்கிழமை , செப்டம்பர் 25 பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

எஸ் பி பியின் மறைந்த துக்கத்தில் இருந்து இன்னும் யாரும் மீளவில்லை இப்படி ஒரு நிலையில் ஆந்திர மாநிலம் கொத்தபேட்டையைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் உடையார் ராஜ்குமார் என்பவரிடம், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதம் பேசியுள்ளார். தனது பெற்றோர்களின் சிலையை செய்து தருமாறு எஸ் பி பி குறியுள்ளதாகவும். அதே போல தனக்கு ஒரு சிலை வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

ஆனால்,  கொரோனா காரணமாக தம்மால் நேரில் வந்து சிலை செய்வதற்கு தேவையான போட்டோஷூட் நடத்த இயலாது என்று எஸ் பி பி கூறியுள்ளாராம். எனவே, சிலை செய்வதற்கு தேவையான தனது புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன் என்றுகூறியுள்ள எஸ்.பி.பி, தன்னுடைய புகைப்படங்களை சிற்பி உடையார் ராஜ்குமாருக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்து இருக்கிறார்.

ஆனால்,  சிற்பி ராஜ்குமார் எஸ்பி பாலசுப்பிரமணியம் சிலையை செய்து கொண்டிருந்த போது தான் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் எஸ் பி பி திரும்பி வந்தபின் சிலையை அவரிடம் ஒப்படைக்கலாம் என்று சிற்பி உடையார் ராஜ்குமார்எண்ணியுள்ளார்.ஆனால் சிற்பி சிலையை செய்து முடித்து இறுதிக்கட்ட பணிகளை தற்போது செய்து வரும் நிலையில் எஸ் பி உயிரிழந்துவிட்டார். தன்னுடைய மரணத்தை தான் முன்னதாகவே உணர்ந்து எஸ் பி பி இந்த சிலையை செய்யச்சொன்னாரா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Advertisement