தன் தந்தையின் நிறைவேறாத கடைசி ஆசை குறித்து எஸ்பிபி சரண் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். பாடகர் எஸ்பிபி அவர்கள் 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. மேலும், இவருடைய உடல் சென்னையிலுள்ள தாமரைபாக்கம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

அதோடு இவருடைய நினைவு நாளை ஒட்டிகடந்த ஆண்டு மக்கள் பலர் இரங்கல் தெரிவிக்க இருந்தனர் . ஆனால், யாரையுமே அங்கு அனுமதிக்கப்படவில்லை. கொரோனா காரணத்தினால் தான் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இப்படி ஒரு நிலையில் எஸ்பிபிக்கு கூடிய விரைவில் மணிமண்டபம் கட்டுவதாக அவருடைய மகன் எஸ்பிபி சரண் பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதில் அவர், எஸ்பிபி இல்லாவிட்டாலும் அவர் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. அப்பாவுக்கு என்ன செய்கிறோம் என்பதைவிட அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருப்பது தான் முக்கியமான ஒன்று.

Advertisement

மணிமண்டபம் குறித்து சரண் சொன்னது:

தற்போது நாங்கள் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், அதற்கான பணம், நேரம் எல்லாம் அதிகம் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். மணி மண்டபத்திற்கான திட்டமிடல்கள் முடிந்தவுடன் அதற்கான வேலைகள் தொடங்கப்படும். ஒரு வருடத்திற்குள் மணிமண்டபம் கட்டி முடிப்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஏனென்றால் மியூசியம், திரையரங்கம் உள்ளிட்ட பல கட்டடங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம். அதோடு எல்லா வேலைகளும் எப்போது முடியும் என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக கூடிய விரைவில் எல்லா வேலைகளையும் தொடங்குவோம். எஸ்.பி.பி. தொண்டு நிறுவனம் மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம்.

எஸ்பிபி கடைசி ஆசை குறித்து சரண் கூறியது:

மீதமுள்ளதை தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது என்று சரண் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சரண் அவர்கள் தன்னுடைய தந்தையின் கடைசி ஆசையை குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அப்பாவிற்கு பெரும்பாலும் ஆசை கிடையாது. அப்படியே ஆசை இருந்தாலும் வெளியில் சொல்ல மாட்டார். இருந்தும் அவருடைய கடைசி ஆசை ஒன்று உள்ளது. அப்பா முகமது ரபிக் உடைய பக்தர் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. ரஃபிக் அவர்களின் குடும்பம் மும்பையில் இருக்கும் போது அப்பா சென்றிருந்தார்.

Advertisement

எஸ்பிபி கடைசி ஆசை கார் :

அப்போது ரஃபிக் பயன்படுத்திய கார் அவர்கள் வீட்டிற்கு வெளியே துருப்பிடித்து இருந்தது. இதை பார்த்து அப்பா அவர்களுடைய குடும்பத்திடம் இந்த காரை கொடுங்கள், நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். இருந்தாலும் அவர்களுடைய குடும்பம் ஒன்றரை வருடங்கள் யோசித்து கலந்து ஆலோசித்து பிறகு தான் அப்பாவிற்கு கார் தரப் போவதாக சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் அப்பா சந்தோஷப் பட்டார். பின் எங்களிடம் வந்து இந்த காரை நான் என்னுடன் வைத்துக் கொள்ளப் போகிறேன் என்று சொன்னார். நாங்களும் இதை எங்க வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எங்கே இடமிருக்கிறது என்று? கேட்டோம்.

Advertisement

ஆசையை நிறைவேற்றும் சரண்:

ஆனால், அப்பா இதை நான் விடமாட்டேன். நான் என்னுடன் தான் வைத்துக் கொள்ள போகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த சமயம் லாக்டவுன். மேலும், அந்த கார் வருவதற்கு முன்பே அப்பா தவறிவிட்டார். பின் நான் ரபி குடும்பத்திடம் பேசி அப்பாவுடைய கடைசி ஆசை, அதை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கேட்டு அந்த காரை வாங்கி ஓரளவுக்கு எங்களால் முடிந்தவரை தயார் பண்ணி செய்திருக்கிறோம். அப்பாவுடைய இடத்தில் அந்த காரை வைக்கப் போகிறோம் என்று கூறியிருக்கிறார். இப்படி சரண் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement