எஸ் பி பியின் மறைவிற்கு அஜித் வராதது குறித்து அவரது மகனும் நடிகருமான எஸ் பி சரண் விளக்கமளித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வெள்ளிக்கிழமை , செப்டம்பர் 25 பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

எஸ் பி பியின் உடலுக்கு பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதிலும் நடிகர் விஜய், மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அஜித் ஒரு இரங்கல் அறிவிப்பை கூட வெளியிடாதது பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. அஜித்தை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது எஸ் பி பி தான். அதே போல எஸ் பி பியின் மகனான சரண் அஜித்தின் நெருங்கிய நண்பர் தான்.

Advertisement

அவ்வளவு ஏன் அஜித் சென்ற முதல் ஷூட்டிங்கிற்கு கூட அவரிடம் நல்ல சட்டை இல்லை என்று சரணின் சட்டையை தான் போட்டு சென்றார். அதே போல அஜித்தின் திரைப்பயணத்தில் எஸ் பி பி பாடிய பாடல்கள் அஜித்திற்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் நடிகர் அஜித், எஸ் பி பி மறைவிற்கு வராதது குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் மரணத்திற்கு அஜித் வராதது குறித்து சரண் பேசுகையில் ‘அஜித் எனக்கு நல்ல நண்பர். அவர் வந்து அப்பாவ பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன? இந்த மாதிரி சூழலில் வரணும் என்று அவசியம் இல்லை. இப்போது இதைப்பத்தி பேச வேண்டியதுமில்லை’ என்று கூறி அஜித் மீதான ஒட்டுமொத்த விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எஸ் பி சரண்.

Advertisement
Advertisement