ரியல் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீர் மரணம்- சோகத்தில் மூழ்கிய சீரியல் குழுவினர்.

0
1815
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீரென இறந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் ராதிகா- கோபி இருவருமே பாக்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களை வெளியே அனுப்ப பார்க்கிறார்கள். ஆனால், இருவருமே போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். தற்போது சீரியலில் ராதிகா பாக்யாவை வேலை செய்யவிடாமல் வம்பு இழுக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பாக்யா அந்த கேண்டீன் ஓனர் கோடீஸ்வரர் இடம் ராதிகா மீது புகார் அளிக்கிறார்.

சீரியல் கதை:

உடனே கோடீஸ்வரரும் ராதிகாவை கண்டிருக்கிறார். பின் இதை வீட்டில் தன்னுடைய மாமியார் ஈஸ்வரியிடம் சொன்னவுடன் ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார். ஈஸ்வரிக்கும் ராதிகாவிற்கும் இடையே சண்டை பயங்கரமாக ஏற்படுகிறது. அந்த சமயம் கோபி ராதிகாவை கடுமையாக திட்டுகிறார். இதனால் கோபமடைந்த ராதிகா வீட்டை விட்டு வெளியேறுகிறார். இனி ராதிகா கோபி வீட்டிற்கு வருவாரா? இல்லை தன்னுடைய வீட்டிலே இருந்து விடுவாரா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அனுபமா சீரியல்:

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீரென இறந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடர் பெங்காலியில் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் ரீமேக்ஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியில் இந்த சீரியலுக்கு அனுபமா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நடிகர் நிதேஷ் பாண்டே இறப்பு:

பல திருப்பங்களுடன் இந்தியில் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த அனுபமா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் நிதேஷ் பாண்டே. தற்போது இவர் தான் இறந்திருக்கிறார். இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். இவருடைய இறப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவருடைய இறப்பிற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement