நயனை திருமணம் செய்த விக்னேஷ் சிவன் லக்கி இல்ல – ஸ்ரீநிதி சொன்ன காரணம் – வைரலாகும் வீடியோ இதோ.

0
246
srinidhi
- Advertisement -

நயன்- விக்னேஷ் சிவன் குறித்து சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் வேற யாரும் இல்லைங்க, அஜித்தின் வலிமை படம் பத்தி பேசி அஜித் ரசிகர்களால் பல தொல்லைகளை சந்தித்து இருந்த சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த 7C என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார் ஸ்ரீநிதி.

-விளம்பரம்-
sreenidhi

ஆனால், இவர் இதற்கு முன்பே குழந்தை பருவத்தில் பல படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இருந்த யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார். இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சீரியல் நடிகை ஸ்ரீநிதி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் பார்த்து இவர் பேசி இருந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை திட்டி தீர்த்து இருந்தார்கள். இதனால் இவருடைய பெயர் சோசியல் மீடியாவில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இவர் நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை இருப்பதாக கூறி இருந்தார்.

சிம்பு குறித்து ஸ்ரீநிதி சொன்னது:

அதுமட்டும் இல்லாமல் சிம்புவின் வீட்டிற்கே சென்று கல்யாணம் செய்து கொள்ள பயங்கர ரகளை செய்து இருந்தார். இதனை தொடர்ந்து பலரும் ஸ்ரீநிதி குறித்து தாறுமாறாக சோசியல் மீடியாவில் வறுத்து எடுத்து இருந்தார்கள். இப்படி சின்னத்திரையில் ஸ்ரீநிதி விவகாரம் தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கின்றது. இதை தொடர்ந்து சீரியல் நடிகையும், தனது தோழியுமான நட்சத்திராவின் திருமணம் குறித்து ஸ்ரீநிதி சில விஷயங்களை கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சர்ச்சை ஸ்ரீநிதி குறித்த தகவல்:

அதற்கு நட்சத்திரா மறுப்பு தெரிவித்து இருந்தார். பின் கடந்த சில வாரங்களாகவே அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இனி தான் சீரியலில் நடிக்கப்போவது இல்லை என்றும் தனக்கு ஒரு பிரேக் வேண்டும் கூறி இருந்தார் ஸ்ரீநிதி. இதனை அடுத்து ஸ்ரீநிதி கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக சென்று இருந்தார். இப்படி அடிக்கடி ஸ்ரீநிதி ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி வருவதால் இவரை பலரும் சர்ச்சை ஸ்ரீநிதி என்றும் அழைத்து வருகின்றனர்.

ஸ்ரீநிதி அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீநிதி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் குறித்து கூறியிருந்தது, நயன்தாரா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. நயன்தாரா தான் லக்கி. காரணம் என்னவென்றால், தமிழ் பையன் நயனுக்கு கிடைத்திருக்கிறார்கள். நல்லா பார்த்துப்பார். அதனால் நயன்தாரா லக்கி என்று ஸ்ரீநிதி அளித்த பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதிக்கு எதிராக கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement