உங்க வாழ்க்கையை காப்பாத்த எந்த ஹீரோவும் வர மாட்டாங்க – மீண்டும் வலிமை படம் குறித்து பேசி வீடியோ வெளியிட்ட ஸ்ரீநிதி.

0
457
valimai
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

-விளம்பரம்-
sreenidhi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி.  இவர் குழந்தை பருவத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து வருபவர். தற்போது இவர்  நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வலிமை படம் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘ நிலவை கொண்டு வா’ பாடலை Spoof செய்து வைரலான இன்ஸ்டா வீடியோ – பாடலை பாடிய உன்னி கிருஷ்ணன் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

வலிமை பட விமர்சனம் :

அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதியும் வலிமை படத்தை பார்த்து கமெண்ட் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஸ்ரீநிதி இடம் மீடியாக்காரர்கள் வலிமை படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீநிதி கூறியது, அஜித் சாரை நான் நேரில் கூட பார்த்துவிடுவேன். வலிமை படம் பார்க்க பொறுமை வேண்டும். ஆனால், எனக்கு பார்க்க பொறுமை இல்லை.

-விளம்பரம்-

திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் :

படம் எப்படி இருக்குனு நீங்களே போய் பாருங்கள். ரொம்ப கொடுமையாக இருக்கிறது. அஜித் சார் கியூட்டாக நடித்திருக்கிறார். ஆனால், படம் ஓடுவதை விட அதிகம் பைக் தான் ஓடுகிறது என்று கூறினார். இப்படி இவர் கூறி இருந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்துவந்தனர். அதிலும் சிலர் இவருக்கு கொலை மிரட்டலும் விட்டு வந்தனர்.

கற்பழிப்பு மிரட்டல் விடுத்த ரசிகர்கள்:

கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், பேச்சிலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி மாதிரி உன்னை கர்ப்பமாக்கி நடு ரோட்டில் விடனும் என்றெல்லாம் கமென்ட் போட்டு இருந்தார்கள் என்று வேதனையுடன் கூறி இருந்தார். அது போக சமீப காலமாக தான் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் இதனால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறி இருந்தார்.

மீண்டும் வலிமை படம் குறித்து வீடியோ :

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் எதனால் இவர் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார் என்று பலரும் நினைத்து வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் தற்போது வலிமை படம் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் வலிமை படம் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது, வலிமை படம் ஒரு சுமாரான படம் தான் என்று மீண்டும் அந்த படத்தை விமர்சனம் செய்து இருப்பது ரசிகர்களை மீண்டும் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement