மனைவி எப்படி இருக்க வேண்டும்.? ஸ்ரீரெட்டி கேள்விக்கு சிம்பு அதிரடி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

0
212
Simbu

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

sri reddy

ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் அவர் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்று நடிகை ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு பங்கேற்ற போது நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ மூலமாக தோன்றி சிம்புவுடன் உரையாடினார்.

அப்போது நடிகர் சிம்புவிடம், நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண் எப்படி இருக்க வேண்டும், அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்க்கு பதிலளித்த சிம்பு, சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு பின்னர் ‘நான் கல்யாணம் செய்து கொள்ளும் பெண், பெண்ணாக மட்டும் இருந்தால் போதும். அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. நீங்களே புரிஞ்சிக்கோங்க என்பது போல பதிலளித்துள்ளார்.

Simbu

தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக இருந்து வந்த நடிகர் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா போன்றவர்களை காதிலித்து இருந்தார்.ஆனால், இந்த இரண்டு காதலும் தோல்வியில் தான் முடிந்தது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிம்பு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தான் தற்போதைக்கு காதலிக்கும் எண்ணத்தில் இல்லை என்பது போலேவே பேசிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.