மேடையில் ஸ்ரீரெட்டியை கிண்டல் செய்த விஷால்..! சிரித்த கீர்த்தி சுரேஷ்..! சாபம் விட்ட ஸ்ரீ ரெட்டி..!

0
623

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த பல்வேறு பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சமீப காலமாக ரெட்டி லீக்ஸ் ஓய்ந்த நிலையில் தற்போது பிரபல தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தனது முகநூல் பக்கத்தில் சாபம் விட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் முருகதாஸ் தொடங்கி ;லாரன்ஸ் வரை தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார். நடிகை ஸ்ரீரெட்டிமுன்வைத்த குற்றச்சாட்டை பலரும் ஆதரித்தும், எதிர்த்தும் வந்த நிலையில் நடிகர் விஷாலும், ஸ்ரீரெட்டி முன்வைத்த குற்றச்சாடை விமர்சித்திருந்தார்.

சமீபத்தில் விஷால் நடித்து வரும் “சண்டகோழி 2 ” படத்தின் பிரஸ் மீட் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷாலும், நடிகை கீர்த்தி சுரேஷும் பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷாலிடம், நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழில் நடித்து வரும் படம் குறித்து கேட்கப்பட்ட போது, நடிகை ஸ்ரீரெட்டி நடித்தால் படகுழுவில் இருப்பவர்கள் அனைவரும் உஷாராக இருப்பார்கள், யாராவது தப்பு செய்தால் எங்கே ஸ்ரீரெட்டி கேமரா பொறுத்தி வீடியோ எடுத்து விடுவார்கள் என்று பயப்படுவார்கள் என்று விஷால் கூறியதும், அரங்கில் இருந்த அனைவரும் சிரித்துவிட விஷால் அருகில் அமர்ந்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷும் சிரித்தார்.

-விளம்பரம்-
Sri Reddy
Sri Reddy

இந்நிலையில் தன்னை விஷால் கிண்டல் செய்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி, கீர்த்தி சுரேஷ் சிரித்ததற்க்கு மட்டும் கோவமடைந்தார். இதனால் தனது முகநூல் பக்கத்தில், விஷால் என்னை பற்றி மேடையில் பேசிய போது கீர்த்தி சுரேஷ் சிரித்தது மிகவும் விகாரமாக இருந்தது. எப்போதும் நீங்கள் நீங்கள் சிறந்த இடத்தில் இருக்க முடியாது. ஒருநாள் போரடுபவர்களின் வலி உங்களுக்கு புரியும்.நீங்கள் தற்போது வேண்டுமானால் வானத்தில் பறக்கலாம் ஆனால், உங்களது இந்த சிரிப்பை மட்டும் நான் மறக்க மாட்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

Advertisement