மகளுக்காக கதையில் மாற்றம் செய்த போனி கபூர்.! தல 59 படத்தின் புதிய அப்டேட்.!

0
731
jhanvi kapoor
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.

இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘பிங்க்’ படத்தில் ரீமேக் என்பது அனைவருக்கு தெரியும். மேலும், இந்த படத்தில் நடிக்கவுள்ள கலைஞ்சர்களின் விவரம் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தனது அம்மாவை போலவே தமிழில் அறிமுகமாக வேண்டும் என்று நடிகை ஜான்வி கபூர் ஆசை படுகிறாராம். அதுவும் முதல் படத்திலேயே அஜித் படத்தில் என்றால் சொல்லவா வேண்டும். இந்த படத்தில் அவர் அஜித்தின் மகளாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்ககள் வெளியாகியுள்ளது.

தனது மகளுக்காக தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தில் புதிய கதாபாத்திரத்தை புகுத்த உள்ளார். ஸ்ரீதேவிக்கு கிடைத்த அதே வரவேற்பு அவரது மகளுக்கும் கிடைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.உலகநாயகனின் மகள் அக்ஷரா ஹாசனும் தமிழில் அஜித் படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement