விஜயுடன் நடிக்க ஸ்ரீதேவி மகளுக்கு இத்தனை கோடி சம்பளமா. முதல் படத்துக்கே இப்படியா.

0
68240
jhanvi-Kapoor
- Advertisement -

அர்ஜுன் ரெட்டி ஹீரோ உடன் நடிக்க ஸ்ரீதேவி மக்களுக்கு இத்தனை கோடியா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!! பொதுவாகவே சினிமா உலகில் பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் களமிறங்குவது தலைமுறை தலைமுறையாக நடந்து வருகின்ற வழக்கம். சமீபத்தில் கூட விக்ரம் தன்னுடைய மகனை களம் இறங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா எல்லோரும் பிரபலங்களின் வாரிசுகள் தான். அந்த வகையில் சினிமா உலகில் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய படங்களில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர்.

-விளம்பரம்-
Image result for janhvi kapoor

- Advertisement -

நடிகை ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர். ஜான்வி கபூர் அவர்கள் தற்போது குஞ்சன் சக்சேனா, ரூஹி அஃப்ஜா, தோஸ்தானா 2 ஆகிய திரைப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனுடன் நெட்ஃப்ளிக்ஸ் திரைப் படமான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ திரைப் படத்திலும் ஜான்வி நடித்து வருகிறார் என்று தெரிய வந்து உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்தை பூரி ஜெகன்நாத் அவர்கள் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. முதலில் இந்த படத்தில் பல பாலிவுட் நடிகைகள் பெயர்கள் அடிபட்டது. கடைசியாக நடிகை ஜான்வி கபூரை தேர்வு செய்தார்கள்.

மேலும், இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் அவர்கள் 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவர்கொண்டா அவர்கள் சினிமா உலகிற்கு வந்த குறுகிய நாளிலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தில் என்ற விஜய் தேவர்கொண்டா லவ்வர் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்று தெரிய வந்து உள்ளது.

-விளம்பரம்-
Image result for janhvi kapoor

அதோடு விஜய் தேவர்கொண்டாவுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். இயக்குனர் க்ரந்தி மாதவ் தான் இந்த படத்தின் கதை, வசனம் எழுத்தாளர் ஆவார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக இருக்க போகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படத்தின் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர எதிர்பார்ப்புகளுடன் உள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

Advertisement