ட்ரெண்டிங் பாடலுக்கு செம ரொமான்டிக் ஆட்டம் போட்ட ஸ்ரீதர் சேனா மானஸி – வைரலாகும் வீடியோ இதோ.

0
556
sreedhar
- Advertisement -

தனுஷின் பாடலுக்கு சூப்பர் சிங்கர் பிரபலங்கள் நடனமாடி இருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஆண்டுகள் பல கடந்தாலும் கொஞ்சம் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

மேலும், இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு பெற்று இருக்கிறது. இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி:

சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி முடிவு பெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மான்சி. இவர் சூப்பர் சிங்கர் சினியர் 8ல் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். இவருடைய மெல்லிய குரலால் பல பேரின் மனதை கவர்ந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மான்சி குறித்த தகவல்:

இவர் பாடுவது மட்டுமில்லாமல் நடனத்திலும் அதிக ஆர்வம் உடையவர். இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு படத்தில் பாடல் ஒன்றை பாடி இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மான்சி சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

மான்சியின் லேட்டஸ்ட் வீடியோ:

இந்த நிலையில் தற்போது மான்சியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் இருந்து மேகம் கருக்காதா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் மிகப் பெரிய அளவில் சீட்டுக் கொடுத்து இருக்கிறது. இதற்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மான்சி சூப்பர் சிங்கர் சீசன் 8 வின்னர் ஸ்ரீதர் சேனாவுடன் இணைந்து நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement