என்னிடம் பல ரகசியங்கள் உள்ளது..சினிமாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் நான்..!நடிகை ஸ்ரீரெட்டி

0
398
srireddy
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த பல்வேறு பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். சமீப காலமாக ரெட்டி லீக்ஸ் ஓய்ந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் பற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் முருகதாஸ் தொடங்கி லாரன்ஸ்,ஸ்ரீகாந்த் வரை தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார்.

- Advertisement -

நடிகை ஸ்ரீரெட்டியின் இந்த ரெட்டி லீக்ஸ் போராட்டம் பல பிரபலங்களின் வயிற்றில் புலியை கரைத்தது. அதுபோக பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டியிடம் பகிர்ந்து கொண்டனர் தற்போது தமிழ் சினிமாவிலேயே தஞ்சம் அடைந்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில காலமாக கொஞ்சம் அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “SIRI”-க்கு எவ்வளவு தகவல் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீக்கும் சினிமாவில் உள்ள பெரிய ஆட்களின் ரொமாண்டிக் காதல் வாழ்க்கை முறை பற்றி அனைத்து தகவலும் தெரியும். பல பெண்களிடம் இருந்து இன்னும் தகவலை தோண்டித்துருவிப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். சினிமா துறையை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள இது மிகவும் உபயோகமாக இருக்கும். போக நடிக்க வாய்ப்புத் தருகிறேன் பேர்வழி என்று பெண்களை சீரழிக்கும் கூட்டத்திடமிருந்து அவர்களைக் காப்பாற்றவும் இது உதவிகரமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement