தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதில் இயக்குனர் ஏ ஆர்முருகதாஸ் தொடங்கி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
தமிழ் நடிகர்களை விட தெலுங்கு நடிகர்கள் மீது தான் இவர் அதிக குற்றசாட்டை வைத்திருந்தார் அதில் ராணாவின் தம்பி ரகுராம் டகுபதியும் அடக்கம். இந்நிலையில் பிரபல தெலுங்கு சினிமாவில் பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான கொரட்டல்லா சிவா மீது பாலியல் புகார் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
சமீபத்தில் இவர் மீது புதிய குற்றச்சாட்டை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. அதில், கொரட்டல்லா சிவா தான் உலகிலேயே மிகவும் மோசமான மனிதர். என்னுடைய வாழ்க்கை வரலாறு படமானால் அதில் இவரை பற்றி தான் பெரும்பாலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இவர் தெலுங்கில் பல்வேறு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும், தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ஸ்ரீமந்துடு, ஜனதா கரேஜ், பாரத் அண்டே நேனு போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள புதிய படத்தையும் இயக்கவுள்ளார்.