போதை பொருள் பயன்படுத்தும் உச்ச நட்சத்திரங்களின் லிஸ்ட் – ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

0
869
srireddy
- Advertisement -

தெலுங்கி சினிமாவில் போதை பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பட்டியலை வெளியிட தயார் என்று சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களக போதை பொருள் விவகாரம் சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

-விளம்பரம்-
https://www.facebook.com/iamsrireddy/videos/751391888752764

அதே போல கன்னட சினிமா துறையிலும் போதை பொருள் பயன்படுத்திய விவாகரத்தில் கன்னட நடிகர் ராகினி திவேதி, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இப்படி ஒரு நிலையில் தெலுங்கு சினிமாவில் போதை பொருள் பயன்படுத்தும் நடிகர் நடிகைகளின் பட்டியலை வெளியிட தயார் என்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

- Advertisement -

அதில், தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் நடத்தும் நடன பார்ட்டிகளிலும் போதைப் பொருள் உள்ளது என்றும் அது மட்டுமின்றி பல ஒழுக்கக் கேடான விஷயங்களும் நடப்பதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி தெலுங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளின் பெயரை வெளியிட தயார் என்று கூறியுள்ளார்.

Srireddy

ஏர்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, அன்று நான் காஸ்டிங் கவுச் குறித்து பேசியபோது ரகுல் பிரீத் சிங் டோலிவுட்டில் காஸ்டிங் கவுச்சோ, போதை பொருள் பயன்பாடுத்துவதோ எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். அதற்கு நடிகை லட்சுமி மஞ்சு கூட ஆதரவாக பேசி இருந்தார். தற்போது ரகுல் பிரீத் சிங் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் இது தான் கர்மா என்பது’ என்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.

-விளம்பரம்-
Advertisement