தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வருகிறார்.ஐஸ்வ்ர்யா தமிழில் 3,வைராஜா வை, லால் சலாம் போன்ற இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஐஸ்வர்யா இயக்குனராக அறிமுகமானது 3 படம் மூலம் தான். இதே படத்தின் தான் ஸ்ருதி ஹாசனும் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பத்திரிகையாள்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் சுருதி ஹாசன், அப்போது பத்திரிகையாளர் ஒருவர் 'ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனராக கலக்கி வருகிறார். தனது தந்தையை வைத்து படம் எடுத்துள்ளார். நீங்கள் எப்போது அது போல இயக்குனராக ஆகப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன் 'அது அவங்களுக்கு புடிச்சி இருக்கு அவங்க அத பண்றாங்க.அடுத்தது உங்கள மாதிரி நான் ஜார்னலிஸ்ட் ஆகனும்னு சொல்லப்போறீங்களா? என்று பதில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்தும் அடுத்தது ஸ்ருதி ஹாசனை ஒரு இயக்குனராக எதிர்பார்க்கலாமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்ருதி ஹாசன் 'ஐயயோ, அப்பாவ வச்சா? வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
சுருதி ஹாசனின் இந்த பதிலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஸ்ருதி ஹாசன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார்.அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருந்தார்.

இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். கடைசியாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. இறுதியாக தெலுங்கில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.






