ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சி – ரசிகர்களை ஷாக்காக்கிய அவரின் புகைப்படம். இப்படி ஒரு பாதிப்பாம்.

0
642
Sruthi
- Advertisement -

ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சுருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார். அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருந்தார் . மேலும், இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார்

- Advertisement -

சுருதிஹாசன் காதல்:

. அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். தற்போது ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார்.

சுருதிஹாசன் திரைப்பயணம்:

இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தான் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றும் கூறி இருந்தார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் ஆன்லைனில் வெளிவந்து இருந்தது. இதில் மிதுன் சக்ரவர்த்தி, அர்ஜன் பாஜ்வா மற்றும் கவுகர் கான் உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

சுருதிஹாசன் நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. பின் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் தயாராகி வரும் சலார் படத்திலும் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தான் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சுருதிஹாசன் போஸ்ட்:

ஆனால், சமீப காலமாகவே சுருதிஹாசன் பதிவிடும் போஸ்ட் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அதில் ஸ்ருதிஹாசன் மேக்கப் இல்லாமல், உடல்நிலை சரியில்லாதவர் போல புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், சரியான செல்ஃபிகள் மற்றும் போஸ்ட்டுகள் நிறைந்த உலகில் போஸ்ட்டுக்கு வராதவை இதோ. மோசமான முடி நாள், காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்னையால் முகம் வீங்கிய நாள், மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்ப் நாள். இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement