நீச்சல் குளத்தில்,நீச்சல் உடையில் செல்ஃபீ புகைப்படத்தை வெளியிட்ட SS மியூசிக் பூஜா.

0
50815
pooja
- Advertisement -

இசை ரசிகர்கள் அனைவரும் FM ஸ்டேஷனுக்கு போன் செய்து தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் டிவி நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கி என்று அறிமுகம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது எஸ்எஸ் மியூசிக் தான். சன்மியூசிக் தொடங்குவதற்கு முன்பாகவே துவங்கப்பட்ட இந்த தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என்று பல்வேறு விதமான மொழிகளின் பாடல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வி ஜெக்கள் தொகுத்து வழங்கினார்கள். தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான வீடியோ ஜாக்கிகள் பிரபலமானவர்கள் அதில் மிகவும் பிரபலமான பெண் தொகுப்பாளினியாக இருந்தவர் பூஜா தான்.

-விளம்பரம்-

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட மாடல் அழகியான இவர் 2004 ஆம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் என்ற அழகிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு மிஸ் கேரளா என்ற அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். அதன்பின்னரே எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாது பூஜா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் நண்பன் பீசா காஞ்சனா 2 போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க :லோகேஷ்ஷின் தற்போதைய நிலை என்ன? வீடியோவை வெளியிட்ட அடடேய் கோபி

மேலும், இவர் தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த பூஜா அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த கிரேக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது கிறேக் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

அதன் பின்னர் பூஜா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது பூஜா தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கடந்த ஆண்டு வெங்கி மாமா என்ற படத்தில் நடித்த பூஜா தற்போது கல்யாண் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement