மீண்டும் தல ரசிகன் என்று நிரூபித்து சிம்பு - அடுத்த பட டைட்டில் என்னனு பாருங்க. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

By Rajkumar · 24/12/2020

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது 'லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு' தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

https://twitter.com/SilambarasanTR_/status/1341960565376217088

இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பே நிறைவடைந்துவிட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் பாருங்க : தங்கம் பாவத்தையில் சாந்தனு ஜோடியாக நடித்த இவர் இந்த நடிகரின் தங்கை தானா ?

ஈஸ்வரன் படத்திற்கு முன்னதாகவே நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்புகள் வெளியானது. ஆனால், அந்த படம் கைவிடபட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தியில் 2 அல்லது 3 கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. ஆனால் தமிழில் அப்படி படங்கள் வருவது அரிதாகவே உள்ளன.‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் இது. கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்று வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு, தீவிர தல ரசிகர் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டைட்டில் மூலம் மீண்டும் அதை நிரூபித்துள்ளார் சிம்பு. 'பத்து தல ' திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த திகில் படமாக இது தயாராகிறது. படத்தில் சிம்புவை இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடத்தில் பார்க்கலாம். மேலும், இந்த படத்தில் நடிகர் சிம்பு தண்டர்போல்ட் தாதாவாக நடிக்கிறார் அவரை கைது பண்ண துடிக்கும் அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கௌதம் கார்த்திக்

Tamil Behind Talkies AMP · Quick view
View full