தங்கம் பாவத்தையில் சாந்தனு ஜோடியாக நடித்த இவர் இந்த நடிகரின் தங்கை தானா ?

0
2371
thangam
- Advertisement -

சமீப காலமாகவே OTT தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். அதிலும் கொரனோ காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரத்தின் படங்கள் கூட OTT தளத்தில் வெளியாகி வருகிறது. அதே போல பல்வேறு நடிகர் நடிகைகளும் வெப் சீரிஸ் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

-விளம்பரம்-
Paava Kadhaigal' teaser: Netflix anthology to release on December 18 - The  Hindu

நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இந்த பாவக் கதையில், தங்கம், ஓர் இரவு, லவ் பண்ண விட்டுடணும், வான் மகள் என்று நான்கு கதை வெளியாகி இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இந்தப் படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன இந்தப் படங்கள். 

- Advertisement -

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1986ஆம் ஆண்டு நடக்கும் ஒரு கதையாக இந்த பகுதி எடுக்கப்பட்டிருக்கும் இதில் மளிகை கடை வைத்திருக்கும் மகனான சாந்தனும் அவனது சிறுவயது நண்பனான முஸ்லிம் மதத்தை சேர்ந்த காளிதாஸ் சகோதரி பவானியை காதலிப்பார் காளிதாஸ் ஒரு திருநங்கை இதனால் அவரை பெற்றோரும் ஊர் மக்களும் இருக்கிறார்கள் மேலும் காசுக்கு தனது நண்பனான சாந்தனு மீது காதல் இருக்கும். ஆனால், சாந்தனு காளிதாஸின் தங்கையை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் வருத்தப்பட்டு பின்னர் அவர்களை ஊரைவிட்டு ஓட உதவி செய்வார் இதனால் அவருக்கு என்ன நேர்கிறது என்பது தான் தங்கம் கதை.

g-v-prakash-sister

இதில் தங்கம் கதாபாத்திரத்தில் நடித்த சாந்தனு சத்தாரு கதாபாத்திரத்தில் நடித்த காளிதாஷும் ஒருவருக்கு ஒருவரை முந்திக்கொண்டு நடித்திருந்தார்கள். அதிலும் காளிதாசன் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று வருகிறதுமேலும், இந்த கதையில் காளிதாசன் தங்கையாக சாஹிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பவானிஸ்ரீ. இவரை பலரும் புதுமுகம் என்று தான் நினைத்திருப்பர். ஆனால், இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷின் தங்கை தான். இவர் மீசைய முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் ராம் தான் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், பவானிஸ்ரீ விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement