அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்கள். நிற்காமல் சென்ற சிம்பு. வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 28/2/2020

தமிழ்த் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிம்பு. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று சொல்லலாம். இவர் கடைசியாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால் சிம்பு மாநாடு படத்தில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் ‘மகா மாநாடு’ என்ற படத்தில் நடிக்க போகிறார் என்றும், இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

https://twitter.com/rmztr1/status/1233264137670541312

இப்படி இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்து கொண்டு வந்தார்கள். சமீபத்தில் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. தற்போது நடிகர் சிம்பு அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ”மாநாடு” படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது. இந்த படம் அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரியவந்தன. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவார்.

இதையும் பாருங்க : திரௌபதி படத்திற்கு ஆதரவு தெரிவித்த பிக் பாஸ் நடிகை. வைரலாகும் புகைப்படம்.

இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் சிம்பு அவர்கள் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் சிம்பு அவர்கள் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். தற்போது மாநாடு படத்தின் பட வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிம்பு அவர்கள் பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால் திருவெற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்கள் இறந்து உள்ளார். இவரின் இறுதி சடங்கிற்கு நடிகர் சிம்பு அவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த சென்று உள்ளார். அப்போது சிம்புவை பார்த்த மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து உள்ளது.அப்போது ரசிகர்கள் சிலர் சிம்புவுடன் செல்பி எடுக்கவும் செய்துள்ளனர்.ஆனால், சிம்பு நிற்காமல் சர சரவென வேகமாக அங்கு இருந்து கிளம்பிவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஞ்சலி செலுத்த வந்த இடத்திலும் இப்படியா?? என்று கேட்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

behindtalkies AMP · Quick view
View full