திரௌபதி படத்திற்கு ஆதரவு தெரிவித்த பிக் பாஸ் நடிகை. வைரலாகும் புகைப்படம்.

0
47096
Draupathi
- Advertisement -

தென்னிந்தியத் திரைப்படத்துறையில் மிகப் பிரபலமான நடன கலைஞர் காயத்திரி ரகுராம். இவர் நடன கலைஞர் மட்டுமல்ல திரைப்பட நடிகையும் ஆவார். காயத்ரி ரகுராம் அவர்கள் சினிமா துறையில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் ஆவார். நடிகை காயத்ரி ரகுராம் 2002 ஆம் ஆண்டு ‘சார்லி சாப்ளின்’ திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பின்னர் அவர் 2008 ஆம் ஆண்டில் இருந்து பல திரைப் படங்களில் நடன இயக்குனராகவும் பணிபுரிந்தார் உள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அதற்கு பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் அவருக்கு சரியாக அமையாததால் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இவர் BJP கட்சியின் தொண்டர் ஆவார். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் திரௌபதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திரௌபதி படம் போட்ட டி- சர்ட்டை அணிந்து உள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் காயத்ரி. இயக்குனர் மோகன் இயக்கத்தில் இன்று திரையரங்கிற்கு வெளிவந்த படம் திரௌபதி. இந்த படத்தில் பல நிஜ விஷயங்களை கூறி உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : திருமணத்தினால் மதம் மாறினீர்களா ? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த நகஹத் கான். அட, அதாங்க நம்ப குஷ்பு.

இந்த படத்தில் ஹீரோவாக ஷாலினியின் அண்ணன், அஜித்தின் மைத்துனன் ரிச்சர்ட் நடித்து உள்ளார். இந்த படத்தில் ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தேவராஜ் எடிட் வேலை செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் தான் இசையமைக்கிறார். பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். சமூகத்தில் நடக்கும் நாடக காதல் பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றியும், சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.

-விளம்பரம்-

இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் திரௌபதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திரௌபதி படம் போட்ட டி- சர்ட்டை அணிந்து உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே பி ஜி பியை சார்ந்த எச். ராஜா அவர்கள் இப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement