சிம்பு இன்னொரு விடியோ இருக்கு.! மஹத் போட்ட ட்வீட்டுக்கு கமண்ட் மட்டும் பாருங்க.!

0
828
mahath
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு வெளியிட்ட வீடியோ தான் தற்போது #அண்டாவுல பால் ஊத்துங்க வீடியோ தான் சமூக வலைதளத்தில் சிம்புவை வறுத்தெடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது சிம்புவின் நண்பரான மஹத் போட்டுள்ள ஒரு ட்வீட்டை ட்விட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சிம்பு தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பேனரோ, பாலாபிஷேகமோ பண்ண வேண்டாம் என்று சிம்பு தெரிவித்திருந்தார். அதனை சிலர் கிண்டல் செய்யவே டென்ஷனான சிம்பு மற்றும் ஒரு விடியோவை வெளியிட்டார்.

- Advertisement -

அதில் எனது பட பேனருக்கு அண்டா கணக்கில் பாலபிஷேகம் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகொள் விடுத்தார். இந்த வீடியோ சமூகவலைத்ததில் வைரலாக பரவி வர சிம்புவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில், சிம்புவின் மற்றொரு வீடியோ ஒன்று இன்று இரவு வெளியாக இருக்கிறது. அது சிம்புவை வெறுக்கும் அணைத்து நபர்களுக்கு ஆப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் என்ன கூறி வருகின்றனர் என்பதை மட்டும் பாருங்கள்.

-விளம்பரம்-
Advertisement