தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், இவருக்கு ப்ளேபாய் என்றும் தமிழ் சினிமாவில் ஒரு செல்லப் பெயரும் இருக்கிறது. நயன்தாரா தொடங்கி ஹன்சிகா பல்வேறு காதல் கிசுகிசுக்களில் சிக்கி உள்ளார். அதேபோல சிம்பு நண்பர்களுடனும் அடிக்கடிபார்ட்டிக்கு செல்வது வழக்கம். மேலும், இவர் கடந்த பிக் பாஸ் சீசனின்போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வைரலாக பரவியது.
இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ள தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியுடன் நடிகர் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சீசனில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மூலம் சிம்புவிற்கு பரிட்சயமான என்பது அறிந்த ஒன்று தான்., ஆனால்,சனம் ஷெட்டிக்கும் சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்று தான் தெரியவில்லை.
இதையும் பாருங்க : யோகா என்ற பெயரில் மோசமான ஆடையில் போஸ்.! பாவனாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!
தர்ஷனின் காதலியான ஷணம் ஷெட்டியும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.
இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.