படு ஸ்லிம்மாக மாறியுள்ள சுப்ரமணியபுறம் ஸ்வாதி. வைரலாகும் புகைப்படங்கள்.

0
55613
- Advertisement -

சசி குமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “சுப்பிரமணியபுரம்” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமானவர் ந நடிகை ஸ்வாதி. முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “டேஞ்சர்” படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி இருந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் ஒரு சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழில் இதுவரை பெரிய நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் ஜெய்,கிருஷ்ணா போன்ற 2 ஆம் நிலை ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இதுவரை தமிழில் “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன் ” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது அழகே இவரது கொஞ்சம் எடுப்பான கோரை பற்களும், சற்று பூசலான உடல் அமைப்பும் தான். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், கொஞ்சம் உடல் எடை கூடிவிட்டார் இந்த இளம் நடிகை. இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘திரு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாதி விமான பைலட் விகாஸ் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டு ஸ்வாதி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் இந்தோனேசியாவில் செட்டில்ஆகிவிட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்க்கு பேட்டி கொடுத்திருந்தார் ஸ்வாதி. அந்த பேட்டியின் போது கொஞ்சம் உடல் எடை கூடி காணப்பட்டார்.

-விளம்பரம்-
View this post on Instagram

S for.. Stay focused on true things.

A post shared by Swati (@swati194) on

இந்த நிலையில் நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் முன்பைவிட கொஞ்சம் படு ஒல்லியாக மாறி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், ஸ்வாதியின் இந்த புகைப்படங்கள் 8 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

Advertisement